கிணற்றில் மூழ்கி மாணவி பலி

ஊத்தங்கரை அருகே கிணற்றில் மூழ்கி மாணவி பலியானார்.
கிணற்றில் மூழ்கி மாணவி பலி
Published on

ஊத்தங்கரை:

ஊத்தங்கரை தாலுகா கல்லாவியை அடுத்த ஆனந்தூர் அருகே கொல்லப்பட்டியை சேர்ந்த முருகன் மகள் பூர்ணிமா (வயது 13). இவர் ஆனந்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். கொல்லப்பட்டியில் உள்ள ஒரு கிணற்றில் நீச்சல் பழகுவதற்காக நேற்று முன்தினம் சென்றார். அந்த நேரம் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கினார். இதில் சிறுமி பூர்ணிமா பலியானார். தகவல் அறிந்த கல்லாவி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com