

சென்னை,
மாநிலம் முழுவதும் உள்ள 31,336 அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மார்ச் 4-ந் தேதி தொடங்கியது. நடப்பு கல்வியாண்டில் 5 லட்சம் மாணவர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஜூலை 31-ந் தேதி நிலவரப்படி, 4.27 லட்சம் மாணவர்கள் அரசு தொடக்கப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இதில், ஒன்றாம் வகுப்பில் மட்டும் 2.95 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆகஸ்ட் 1-ந் தேதியுடன் மாணவர் சேர்க்கை நிறைவடைய இருந்த நிலையில், எந்தக் குழந்தையும் கல்வி வாய்ப்பை இழக்கக்கூடாது என்பதற்காக சேர்க்கை காலத்தை நீட்டிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வரும் 31-ந் தேதி வரை தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.