பள்ளி கழிவறையில் குழந்தை பெற்றெடுத்த மாணவி - பெற்றோர், ஆசிரியர்கள் அதிர்ச்சி...!

கடலூர் அருகே அரசு பள்ளி வளாகத்தில் அந்த பள்ளியை சேர்ந்த மாணவி குழந்தை பெற்றெடுத்துள்ளார்.
பள்ளி கழிவறையில் குழந்தை பெற்றெடுத்த மாணவி - பெற்றோர், ஆசிரியர்கள் அதிர்ச்சி...!
Published on

கடலூர்,

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் கழிவறை அருகே இறந்த நிலையில் ஆண் சிசுவின் சடலம் கிடப்பதாக பேலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இறந்த நிலையில் கிடந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசேதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் அதே பகுதியில் படிக்கும் பள்ளி மாணவி ஒருவரே இந்த குழந்தையை பெற்றெடுத்தது உறுதியானது. சகேதரன் உறவு முறை கெண்ட 10 ஆம் வகுப்பு சிறுவனுடன் அந்த பெண் நெருங்கி பழகியதில் கர்ப்பமாகி உள்ளார். இதனை யாரிடமும் செல்லாமல் இருந்து வந்த அவர் சம்பவத்தன்று குழந்தையை பெற்றெடுத்து கழிவறை அருகே வீசி விட்டு வந்ததும் தெரியவந்தது.

இதில் சம்பந்தப்பட்ட 10 ஆம் வகுப்பு சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர். பள்ளி மாணவி ஒருவர் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் வெளிவந்த நிலையில் அந்த கிராமத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com