பள்ளி வாகனம் மோதி மாணவன் உயிரிழந்த விவகாரம் - தாளாளர், வேன் ஓட்டுநர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு

பள்ளி வேனின் ஓட்டுநர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், மாணவர்களை வேனிலிருந்து இறக்கி விடும் ஊழியரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பள்ளி வாகனம் மோதி மாணவன் உயிரிழந்த விவகாரம் - தாளாளர், வேன் ஓட்டுநர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு
Published on

சென்னை,

சென்னை வளசரவாக்கம் அருகே உள்ள ஆழ்வார் திருநகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இன்று காலை பள்ளியின் வேன் மோதியதில் தீக்சித் என்ற இரண்டாம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார். தொடர்ந்து, தனியார் பள்ளிக்கு நேரில் வந்த மாவட்ட கல்வி அதிகாரி மார்க்ஸ், அம்பத்தூர் வருவாய்த் துறை அதிகாரி இளங்கோ, காவல் துணை ஆணையர் மீனா உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

வேன் ஓட்டுநர் பூங்காவனத்தை கைது செய்த காவல்துறையினர் பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, தாளாளர் ஜெயசுபாஷ், முதல்வர் தனலட்சுமி, மாணவர்களை வேனிலிருந்து இறக்கிவிடும் ஊழியர் ஞானசக்தி ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து ஊழியர் ஞானசக்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com