

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கல்லூரி மாணவிகளுக்கு இடையேயான முதல்-அமைச்சர் சுழற்கோப்பை தடகள போட்டி நடைபெற்றது. அதில் சுதர்ஷன் கலை, அறிவியல் கல்லூரி முதுகலை கணிதத்துறை மாணவி ஆர்.லாவண்யா 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு 2-ம் இடம் பெற்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி, மண்டல முதுநிலை மேலாளர் சுஜாதா ஆகியோர் பரிசுத்தொகை ரூ.75 ஆயிரம் மற்றும் வெள்ளிப்பதக்கம், சான்றிதழ் ஆகியவற்றை வழங்கி பாராட்டினர். மாணவி லாவண்யாவுக்கு கல்லூரி நிர்வாகம், முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.