

தூத்துக்குடி,
தூத்துக்குடி டிலைட் பப்ளிக் பள்ளி மாணவன் ஜான் டிசோன், இவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் நடந்த உலகசாதனை நிகழ்ச்சியில் பங்கேற்று காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை கீபோர்டு வாசித்தார். இதில் காலை 11 மணி முதல் 12 மணி வரை கண்களை கட்டிக் கொண்டு கீபோர்டு வாசித்து சாதனை படைத்தார். இவரது சாதனையை நோபிள் உலக சாதனை புத்தக அமைப்பினர் பதிவு செய்து உள்ளனர்.
இளம் வயதிலேயே இந்த அரிய உலக சாதனையைப் படைத்து பள்ளிக்கும், பெற்றோருக்கும். மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்த மாணவனுக்கு பள்ளி தலைவர் ஜெயசீலன், பள்ளி தாளாளர் பிரபாகரன் ஜான், பள்ளி முதல்வர் சோபியா செல்வராணி, பள்ளி டிரஸ்ட் செயலாளர் மெர்லின் பிரமிளா ஆகியோர் பாராட்டினர்.