மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி கல்லூரி மாணவர் பலி

கீரம்பூர் அருகே மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதியதில் கல்லூரி மாணவர் இறந்தார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.
மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி கல்லூரி மாணவர் பலி
Published on

பரமத்திவேலூர்

கல்லூரி மாணவர்

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், திருப்பதி அர்பன் பகுதியைச் சேர்ந்தவர் மோடன் வெங்கிட்டு. இவரது மகன் மோடன் கிரண் (வயது 26). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.டெக் இறுதி ஆண்டு படித்து வந்தார். இவரது நண்பர் திருப்பதி, அசோக் நகரை சேர்ந்தவர் விஜயபிரதாப்ரெட்டி (25). இவர்கள் இருவரும் திருப்பதியில் இருந்து புறப்பட்டு கேரள மாநிலத்திற்கு சுற்றுலா செல்ல மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

நாமக்கல் அடுத்த புலவர்பாளையம் சர்வீஸ் ஸ்டேஷன் அருகே நாமக்கல்லில் இருந்து கரூர் செல்லும் பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது கல்லூரி மாணவர் மோடன் கிரண் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சாலையின் இடது புறத்தில் இருந்த பள்ளத்தில் எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி விழுந்து அருகில் உள்ள ஒரு மரத்தில் மோதியுள்ளது.

சிகிச்சை பலனின்றி சாவு

இதில் படுகாயம் அடைந்த மோடன் கிரணையும், அவரது நண்பர் விஜயபிரதாப்ரெட்டியையும் அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மோடன் கிரண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த விஜயபிரதாப்ரெட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தகவல் அறிந்த பரமத்தி போலீசார் கல்லூரி மாணவர் மோடன் கிரணின் உடலை மீட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக சேர்த்தனர். மேலும் விபத்து குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com