மாணவி பாலியல் வன்கொடுமை: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர்.
மாணவி பாலியல் வன்கொடுமை: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது
Published on

சென்னை,

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் பல்கலைக்கழகத்தின் பிரதான வாயில் முன்பாக சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர். அதைத்தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகம் அமைந்துள்ள சர்தார் படேல் சாலையில், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர், அண்ணா பல்கலைக்கழகத்துக்கும், கவர்னர் மாளிகைக்கும் இடையிலான சாலையை மறைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், கிண்டி வழியாக அடையாறு செல்லும் சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. முன்னதாக, இன்று காலை முதலே ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வந்த அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசைக் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.,வினரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அதிமுகவினர் சைதாப்பேட்டை சமூக நலக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com