மாணவர் சங்க தொடக்க விழா

சீதபற்பநல்லூர் ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியில் மாணவர் சங்க தொடக்க விழா நடைபெற்றது.
மாணவர் சங்க தொடக்க விழா
Published on

ஆலங்குளம்:

சீதபற்பநல்லூர் அருகே ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் சங்க உறுப்பினர்களை அறிமுகம் செய்வதற்கான மாணவர் சங்கம் 2024-ன் தொடக்க விழா நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் வைத்து நடைபெற்ற இந்த விழாவிற்கு கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் மதிவாணன் தலைமை தாங்கினார்.முதல்வர் வேலாயுதம் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மூத்த தகவல் தொழில்நுட்ப திட்டத்தின் மேலாளர் செல்வ ஆறுமுகம் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற விழாவில் மாணவர் சங்க உறுப்பின்னர் சக்தி சினேகா வரவேற்றார். மாணவர் சங்க தலைவர் தனுஷ் பாரதி சங்க கல்வித் திட்டத்தை வழங்கினார். அனைத்து மாணவ சங்க உறுப்பினர்களும் சங்கத்தை நிர்வகிப்பதற்கான உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியின் முடிவில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் இறுதியாண்டு மாணவி மகேஸ்வரி நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை துறை தலைவர் சுரேஷ் தங்க கிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் லாவண்யா மதியழகி மற்றும் உதவி பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com