

சென்னை,
சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய்யை நேற்று இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில தலைவர் மிருதுளா, மாநில செயலாளர் சம்சீர் அகமது மற்றும் நிர்வாகிகள் சந்தித்து பேசினர். மேலும் கோரிக்கை தொடர்பாக மனுவும் அளித்தனர்.
அதில் அனைத்து கல்லூரிகளில் மாணவர் பேரவை தேர்தல் நடத்துதல், தேசிய கல்விக் கொள்கையை அனுமதிக்கக் கூடாது, நீட் விலக்கு மசோதா நிறைவேற்றுக, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான விடுதி உணவுப்படியை உயர்த்த வேண்டும், பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்பட 29 அம்ச கோரிக்கைகளை தெரிவித்திருந்தனர்.