கராத்தே பயிற்சிக்கு சென்ற மாணவி கர்ப்பமான விபரீதம்... வாலிபர் கைது


கராத்தே பயிற்சிக்கு சென்ற மாணவி கர்ப்பமான விபரீதம்... வாலிபர் கைது
x
தினத்தந்தி 23 May 2025 10:25 AM IST (Updated: 23 May 2025 12:00 PM IST)
t-max-icont-min-icon

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மாணவிக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் டவுன் திருவள்ளுவர் நகரில் சேட்டு என்பவரின் மகன் எழில்இசை (வயது 28) கராத்தே பயிற்சி மையம் நடத்தி வந்தார். இங்கு பயிற்சி பெற்று வந்த பள்ளி மாணவியிடம் எழில்இசை ஆசைவார்த்தை கூறி அவ்வப்போது பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவி கர்ப்பமானார். இதனால் மாணவிக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து மாணவியை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவளை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவி கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தனர். பின்னர் இது குறித்து செங்கம் அனைத்து மகளிர் போலீசாருக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கடந்த பிப்ரவரி மாதம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

அப்போது மாணவி தனது கர்ப்பத்திற்கு காரணம் யாரென தெரியவில்லை என தெரிவித்ததால் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மாணவிக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் குழந்தை அரசு உதவி பெறும் தனியார் தொண்டு நிறுவனத்தில் பராமரிக்க அனுமதிக்கப்பட்டது. மாணவி அவரது பெற்றோருடன் உள்ளார்.

இந்த நிலையில், டி.என்.ஏ. ஆய்வில் கராத்தே பயிற்சியாளர் எழில்இசை மாணவியிடம் தனிமையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து செங்கம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சாந்தி போக்சோ உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து எழில்இசையை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story