யோகா போட்டியில் மாணவர்கள் சாதனை

யோகா போட்டியில் மாணவர்கள் சாதனை படைத்தனர்.
யோகா போட்டியில் மாணவர்கள் சாதனை
Published on

சுரண்டை:

சன்யோகா ஹெல்த் அசோசியேசன் யூத் கேம்ஸ் பெடரேஷன் ஆப் இந்தியா இணைந்து மாநில யோகா போட்டியை குற்றாலம் கலைவாணர் கலையரங்கத்தில் நடத்தியது. 25-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கெண்டனர். இதில் சுரண்டை எஸ்.ஆர்.ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ் பள்ளியில் இருந்து 37 மாணவர்கள் கலந்து கெண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பரிசுகளை பெற்றனர். சாதனை படைத்த மாணவர்களை குழல்வாய் மொழி அம்மாள் சிவன் நாடார் அறக்கட்டளை நிறுவனர் சிவபபிஷ்ராம், பள்ளி செயலர் சிவ டிப்ஜினிஸ்ராம், முதல்வர் பொன் மனோன்யா மற்றும் தலைமை ஆசிரியர் மாரிக்கனி ஆகியோர் பாராட்டினர். ஆசிரியைகள் மகாராணி, நந்தினி, மற்றும் தாமரைச்செல்வி ஆகியோர் மாணவர்களை ஒருங்கிணைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com