சேரன்மாதேவி மாணவர்கள் சாதனை

மாநில சிலம்பாட்ட போட்டியில் சேரன்மாதேவி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
சேரன்மாதேவி மாணவர்கள் சாதனை
Published on

சேரன்மாதேவி:

புதுச்சேரியில் சிலம்ப கலைக்கழகம் நடத்திய 7-ம் ஆண்டு மாநில அளவிலான தனித்திறமை போட்டியில் சேரன்மாதேவி முகமது இஸ்மாயில் சிலம்பாட்ட பயிற்சி பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 25 தங்க பதக்கங்களும், 11 வெள்ளி பதக்கங்களும் வென்றனர்.

போட்டியில் வென்றவர்களுக்கு மத்திய கலாசார பண்பாட்டு அமைச்சக இயக்குனர் கோபால், சுற்றுலாத்துறை மேலாண்மை இயக்குனர் பாஸ்கரன் ஆகியோர் சான்றிதழ்களையும், பதக்கங்களையும் வழங்கினர். சாதனை படைத்த மாணவர்கள் மற்றும் பயிற்சி அளித்த முகமது இஸ்மாயிலை அனைவரும் பாராட்டினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com