சுரண்டை பள்ளி மாணவர்கள் சாதனை

ஓவியப் போட்டியில் சுரண்டை பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
சுரண்டை பள்ளி மாணவர்கள் சாதனை
Published on

சுரண்டை:

குளோபல் ஈவன்ட் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மாநில அளவிலான ஓவியப்போட்டி நடந்தது. இதில் சுரண்டை எஸ்.ஆர். ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளியில் இருந்து வகுப்பு வாரியாக சுமார் 183 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் 13 பேர் முதல் பரிசு பெற்று சாதனை படைத்தனர். அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை குழல்வாய்மொழி அம்மாள் சிவன்நாடார் அறக்கட்டளை நிறுவனத்தின் நிறுவனர் சிவபபிஸ்ராம், பள்ளியின் செயலாளர் சிவடிப்ஜினிஸ் ராம், முதல்வர் பொன்மனோன்யா, தலைமை ஆசிரியர் மாரிக்கனி ஆகியோர் பாராட்டினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com