இசக்கி வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்கள் சாதனை

தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இசக்கி வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்கள் சாதனை
Published on

ரைட் விஸ் என்ற நிறுவனம் மாணவர்களின் திறமையை வளர்ப்பதற்காக கட்டுரை, ஓவியம், பேச்சு, உளவியல் திறன் போட்டிகளை நடத்தியது. இதில் தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். இந்த மாணவ- மாணவிகளை பள்ளியின் நிறுவனர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. வாழ்த்தினார். பள்ளி நிர்வாக இயக்குனர் இசக்கி துரை பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் மோனிகா டிசோசா, பள்ளி அலுவலக இயக்குனர் ராம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்காக பயிற்சி செய்த ஆசிரியர்களை பள்ளி நிர்வாகம் பாராட்டியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com