மதுரை மருத்துவ கல்லூரி மாணவர்கள் மவுன அஞ்சலி

கேரள டாக்டர் கொலைக்கு கண்டனம் தரிவித்து மதுரை மருத்துவ கல்லூரி மாணவர்கள் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.
மதுரை மருத்துவ கல்லூரி மாணவர்கள் மவுன அஞ்சலி
Published on

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த சந்தீப் என்பவர் வழக்கு தொடர்பாக போலீசாரால் கைது செய்யப்பட்டு, காலில் காயம் இருந்ததால் கொட்டாரக்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டார். அந்த ஆஸ்பத்திரியில் கோட்டயத்தை சேர்ந்த வந்தனா தாஸ் பயிற்சி டாக்டராகப் பணியாற்றி வந்தார். சந்தீப்பை பரிசோதித்துக் கொண்டிருக்கும் போதே, அவர் வந்தனாவை பலமாக கழுத்திலும் தலையிலும் கத்தியால் தாக்கியதால் வந்தனா உயிரிழந்தார். இந்த செயல் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கொலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் டாக்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் மதுரை மருத்துவக்கல்லூரியில் நேற்று மாணவர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். டாக்டர் வந்தனா உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மாணவர்கள் கருப்பு நிற ரிப்பன் அணிந்து பதாகைகளுடன் அவரது உருவப்படத்திற்கு மலர்கள் வைத்தும் மெழுகுவர்த்தி ஏற்றியும் மவுன அஞ்சலி செலுத்தினர்.மேலும் டாக்டர்கள் மீது நடைபெறும் தொடர் தாக்குதல்களுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சிக்கு மாணவர் சங்க தலைவர் பிரேம் சந்தீப் தலைமை தாங்கினர். மாணவர் குழு உறுப்பினர்கள் நபீஸ், தீப்தி வர்ஷா, ஹரி வைஷ்ணவ், ரின்சன் தாமஸ், பிரமிதா ஆகியோர் பேசினர்.இதில் மதுரை மருத்துவக்கல்லூரி மாணவர்களும், பயிற்சி மருத்துவர்களும் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com