மாணவிகள் சவால்களை எதிர்கொள்ள தயாராக வேண்டும்

மாணவிகள் சவால்களை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என கலெக்டர் ஜெயசீலன் கூறினார்.
மாணவிகள் சவால்களை எதிர்கொள்ள தயாராக வேண்டும்
Published on

மாணவிகள் சவால்களை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என கலெக்டர் ஜெயசீலன் கூறினார்.

பரப்புரை நிகழ்ச்சி

விருதுநகர் வி.வி.வன்னிய பெருமாள் மகளிர் கல்லூரியில் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் தமிழ் கனவு மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் தமிழ் பண்பாட்டின் வேர்கள் என்பது பற்றியும், கவிஞர் ஓவியா பெண்களும் வரலாறும் என்பது குறித்தும் பேசினா. நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி கலெக்டர் பேசுகையில், மாணவிகள் கல்லூரியில் படிப்பை முடித்து வெளியே செல்லும் பொழுது சவால்கள் கைநீட்டி வரவேற்பதாக இருக்காது.

சவால்கள்

மிகப்பெரிய வாய்ப்புகள் எளிதாக கிடைத்து விடாது. கிடைக்கும் வாய்ப்புகளில் அரசியலும், சவால்களும், போட்டிகளும் நிறைந்திருக்கும். அதனை எதிர்கொள்ள உங்களை தயார்படுத்தி கொள்வதற்காகவே இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி ரவிக்குமார், கல்லூரி செயலர் கோவிந்தராஜ பெருமாள் மற்றும் கல்லூரி பேராசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com