மாணவர்களுக்கு தற்கொலை எண்ணம் வரவே கூடாது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மாணவர்களுக்கு தற்கொலை எண்ணம் வரவே கூடாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மாணவர்களுக்கு தற்கொலை எண்ணம் வரவே கூடாது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை,

சென்னையில் உள்ள குரு நானக் கல்லூரியின் 50ம் ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

கொரோனா தொற்றால் என் தொண்டை பாதிக்கப்பட்டுள்ளது. தொண்டை பாதிக்கப்பட்டாலும் தொண்டு பாதிக்கப்பட கூடாது என்பதால், என் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறேன்.

சமீப காலமாக நடந்த சில நிகழ்வுகள் என்னை மனவேதனை அடைய செய்தன. பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாணவிகளுக்கு மன, உடல் ரீதியாக இழி செயல் நடந்தால் தமிழக அரசு வேடிக்கை பார்க்காது. குற்றவாளிகளுக்கு நிச்சயம் தண்டனை பெற்று தரும்.

மாணவர்களுக்கு தற்கொலை எண்ணம் வரவே கூடாது. மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் சிந்தனைகளை கைவிட்டு உயிர்பிக்கும் சிந்தனைகளை மேற்கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை பார்த்துக் கொண்டு அரசு அமைதியாக இருக்காது.

மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடன் மனம் விட்டு பேச வேண்டும். படிப்போடு கல்வி முடிவதில்லை; பாடம் நடத்திய பிறகு ஆசிரியர் பணி முடிந்து விடாது. கல்வி நிறுவனம் நடத்துவோர் தொழில் வர்த்தமாக இல்லாமல் தொண்டனாக நினைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com