அரசு பள்ளியில் கழிவறையின்றி மாணவர்கள் அவதி: நடவடிக்கை எடுக்க இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை


அரசு பள்ளியில் கழிவறையின்றி மாணவர்கள் அவதி: நடவடிக்கை எடுக்க இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை
x

கோவில்பட்டி வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கழிப்பறை வசதி இல்லாமல் மாணவர்கள் பொதுவெளியில் சிறுநீர் கழிப்பதால் அவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கழிப்பறை வசதி இல்லாமல் மாணவர்கள் பொதுவெளியில் சிறுநீர் கழிக்கும் நிலையால் மாணவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வருவதற்கு சிறிது காலமே இருப்பதால் இது மாணவர்களின் உடல் நலத்தையும், கல்வியையும் பாதிக்கும். பள்ளியில் இரண்டே கழிப்பறை இருந்தும் அதையும் பள்ளி மூடி கிடப்பில் போட்டுடிருக்கிறது.

இதனால் மாணவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே மூடி கிடப்பில் இருக்கும் கழிவறையை சரி செய்து, மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும், கூடுதலாக சிறுநீர் கழிப்பதற்கு கழிப்பறை அமைத்து கொடுக்க வேண்டும் என்றும் கோவில்பட்டியில் உள்ள மாவட்ட கல்வி அலுவலருக்கு இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ராம்குமார் தலைமையில் மாவட்ட குழு சார்பாக மனு அளிக்கப்பட்டது.

1 More update

Next Story