பஸ் வசதி இன்றி மாணவ-மாணவிகள் அவதி

பஸ் வசதி இன்றி மாணவ-மாணவிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
பஸ் வசதி இன்றி மாணவ-மாணவிகள் அவதி
Published on

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கடம்பூர் கிராமத்தை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து எண்ணற்ற மாணவ- மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் என பலரும் அரியலூர் நோக்கி தினமும் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. எனவே அந்த நேரத்தில் போதிய பஸ் வசதிகள் இல்லாமல் விக்கிரமங்கலம் சென்று அங்கிருந்து பஸ் ஏறி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இவர்களின் நலன் கருதி பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com