கள்ளக்குறிச்சி: பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம்

அரசு பேருந்தின் பின்புற டேஞ்சர் லைட்டைப் பிடித்தபடி தொங்கியவாறு உயிரை பணயம் வைத்து பயணம் செய்தனர்.
கள்ளக்குறிச்சி: பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம்
Published on

கள்ளக்குறிச்சி

தமிழகத்தில் ஒரு சில் இடங்களில் பள்ளி, கல்லுாரி, அலுவலகம் திறப்பு, முடியும் நேரத்தில் போதிய பஸ்கள் இல்லாததால், உயிருக்கு ஆபத்தான முறையில் மாணவர்கள் பஸ் படிகட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வது வாடிக்கையாகியுள்ளது.

பள்ளி மாணவர்கள்

அந்தவகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள்

பேருந்தில் ஏற்கனவே அதிகளவில் கூட்டம் இருந்ததால், மாணவர்கள் பலர் உள்ளே ஏற முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், களமருதூர் அரசு பள்ளிக்குச் செல்லும் சில மாணவர்கள், பேருந்தின் பின்புற டேஞ்சர் லைட்டைப் பிடித்தபடி தொங்கியவாறு உயிரை பணயம் வைத்து .பஸ் படிக்கட்டில் பயணம் செய்தனர்.

கூடுதல் பேருந்துகள்

பள்ளி நேரங்களில் கூடுதல் அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும், இதுபோன்ற ஆபத்தான பயணங்களைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com