பேருந்துகளில் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் மாணவர்கள் மீது புகார் அளிக்கலாம் - போக்குவரத்து துறை

அரசுப் பேருந்துகளில் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் மாணவர்கள் மீது புகார் அளிக்கலாம் என போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
பேருந்துகளில் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் மாணவர்கள் மீது புகார் அளிக்கலாம் - போக்குவரத்து துறை
Published on

சென்னை,

மாநகர அரசுப் பேக்குவரத்துத் துறை மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

மாநகர பேக்குவரத்து கழக பேருந்துகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் தெங்கியபடி பயணம் செய்தவாறு பேருந்துகளில் ஏறும், பேதும், பயணம் செய்யும்பேதும், பாதுகாப்பான விதிகளை கடைப்பிடிக்கச் செய்ய ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நிலையான இயக்க நெறிமுறைகள் ஏற்கனவே சுற்றறிக்கை மூலம் வலியுறுத்தப்பட்ட நிலையில், ஒரு சில பேருந்துகளில் மாணவர்கள் படிகட்டு பயணம் தெடருவதால் மீண்டும் கீழ்வரும் இயக்க நெறிமுகளை கடைப்பிடிக்க வலியுறுத்தப்படுகிறது.

அதன்படி, வழித்தடங்களில் ஏதேனும் மாணவர்கள் படியில் தெங்க நேரிட்டாலே அல்லது உயிருக்கு பாதுகாப்பற்ற முறையில் பயணிக்க முற்பட்டலே அந்த பேருந்தை நிறுத்தி படிக்கட்டு மற்றும் முறையற்ற பயணத்தை தவிர்க்க மாணவர்களை அறிவுறுத்த வேண்டும்.

மாணவர்கள், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களின் அறிவுரையை கேட்காமல் மீறி செயல்பட்டு, நிலைமை கட்டுப்பாட்டை மீறினால் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பேருந்து இயக்கத்தை பேக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் ஓரமாக நிறுத்தி அருகில் உள்ள காவல் நிலையத்திற்கே அல்லது காவல் துறை அவசர அழைப்பு 100 எண்ணுக்கே மற்றும் மாநகர பேக்குவரத்து கழக வான்தந்தி பிரிவுக்கும் தகவல் தெரிவித்து புகார் அளித்திட வேண்டும்.

பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தினை உறுதி செய்வது ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களின் பெறுப்பு என்பதனை உணர்ந்து பணிபுரிய வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com