கைப்பந்து போட்டியில் மாணவர்கள் வெற்றி

கைப்பந்து போட்டியில் வடகரை பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
கைப்பந்து போட்டியில் மாணவர்கள் வெற்றி
Published on

கடையநல்லூர்:

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் தென்காசி வருவாய் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி எஸ்.வி.மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. 36 அணிகளை சோந்த மாணவ-மாணவிகள் பங்கேற்ற இப்போட்டியில் 6 அணிகள் வெற்றி பெற்றனர். இதில் 3 அணிகள் வடகரை ஜாய் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் வெற்றி பெற்று மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை பள்ளி தாளாளர்கள் சாலமோன், ஜெயா சாலமோன், இயக்குனர் அகஸ்டின் ஜோசப், முதல்வர் ஜோதி, துணை முதல்வர் கார்த்திகை கணபதி மற்றும் விளையாட்டு ஆசிரியர்கள் ரமேஷ், சங்கர சுப்பிரமணியன், ராஜதுரை, சியாமீனா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com