சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தணிக்கை குழுவினர் திடீர் ஆய்வு

பல்கலைக்கழகத்தின் வரவு செலவுகளை ஆய்வு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தணிக்கை குழுவினர் திடீர் ஆய்வு
Published on

சேலம்,

சேலம் பெரியார் பல்கலைக்கழக முறைகேடுகள் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பல்கலைக்கழகத்தின் அனைத்து பணபரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களை 5 பேர் கொண்ட தமிழக அரசின் சிறப்பு தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தனர்.

இது தொடர்பாக பேசிய அதிகாரிகள், உள்ளாட்சி நிதி பெறும் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவைகளை 6 மாதங்களுக்கு ஒருமுறை தணிக்கை செய்வது வழக்கம் எனவும், அந்த வகையில் பல்கலைக்கழகத்தின் வரவு செலவுகளை ஆய்வு செய்ததாகவும் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com