தென் மாவட்டங்களில் மழை பாதிப்பை ஆய்வு செய்ய ஆய்வுக்குழு - அண்ணாமலை அறிவிப்பு

நயினார் நாகேந்திரன் தலைமையில் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.
தென் மாவட்டங்களில் மழை பாதிப்பை ஆய்வு செய்ய ஆய்வுக்குழு - அண்ணாமலை அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த சில நாட்களுக்கு முன்பாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதனால் அங்குள்ள மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிப்பின் தீவிரத்தை முழுமையாக ஆய்வு செய்து மாநிலத்திற்கு அறிக்கை சமர்ப்பித்திட பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் குழு அமைக்கப்படுகிறது. இக்குழுவானது உடனடியாக ஆய்வு செய்து அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

மாநில அளவிலான குழு

1.Dr.சசிகலா புஷ்பா - மாநில துணை தலைவர்

2. பொன் பாலகணபதி - மாநில பொது செயலாளர்

3. K.நீலமுரளி யாதவ் - மாவட்ட பார்வையாளர், திருநெல்வேலி தெற்கு

4. A.N.ராஜகண்ணன் - மாவட்ட பார்வையாளர், திருநெல்வேலி வடக்கு

5. R.சித்ராங்கதன் - மாவட்டத் தலைவர். தூத்துக்குடி தெற்கு

6. வெங்கடேசன் சென்னகேசவன் - மாவட்டத் தலைவர். தூத்துக்குடி வடக்கு

7. S.P.தமிழ்ச் செல்வன் - மாவட்டத் தலைவர். திருநெல்வேலி தெற்கு

8. A.தயாசங்கர் - மாவட்டத் தலைவர், திருநெல்வேலி வடக்கு

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com