வாகனம் ஏற்றி உதவி ஆய்வாளர் கொலை: குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் சரண்

எஸ்.ஐ பாலு கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய முருகவேல் இன்று காலை 11 மணி அளவில் விளாத்திகுளம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
வாகனம் ஏற்றி உதவி ஆய்வாளர் கொலை: குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் சரண்
Published on

விளாத்திகுளம்,

ஏரல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பாலு(56). இவர் நேற்றிரவு ஏரல் காவல் நிலையத்துக்கு உட்பட்ட கொற்கை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட முருகவேல் என்பவரை உதவி ஆய்வாளர் பாலு கண்டித்தாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த முருக வேல் சரக்கு வாகனத்தை எடுத்து வந்து எஸ்.ஐ பாலுவை வாகனத்தை ஏற்றி கொலை செய்து விட்டு தப்பி ஓடினார்.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். வாகனம் ஏற்றி உதவி ஆய்வாளர் கொல்லப்பட்ட சம்பவம், ஏரல் காவல் நிலைய போலீஸார் மற்றும் காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் எஸ்.ஐ பாலு கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய முருகவேல் இன்று காலை 11 மணி அளவில் விளாத்திகுளம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com