மானியத்தில் சூரியசக்தி மின் மோட்டார்

மானியத்துடன் சூரிய சக்தி மின் மாட்டார் இணைப்பு வழங்க வாய்ப்பு உள்ளதாக மின் பகிர்மான வட்ட மேற்பார்வை என்ஜினீயர் லதா கூறினார்.
மானியத்தில் சூரியசக்தி மின் மோட்டார்
Published on

விருதுநகர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை என்ஜினீயர் லதா கூறியதாவது:-

புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள பிரதம மந்திரியின் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் முன்னோடி திட்டமான சூரிய சக்தி மூலம் இயங்கக்கூடிய 7.5 ஹெச்.பி. உள்ள மோட்டார் பம்பு செட்டுகளுக்கு மற்றும் விவசாய மின் இணைப்பு வேண்டி தட்கல் திட்டம், சுயநிதி திட்டம் ரூ.30 ஆயிரம் மற்றும் ரூ.50 ஆயிரம், சாதாரண முறையிலான திட்டம் ஆகிய திட்டங்களில் பதிவு செய்துள்ளனர். இவ்வாறு பதிவு செய்தவர்கள் சூரிய சக்தி மூலம் இயங்கக்கூடிய 7.5 ஹெச்.பி. உள்ள மோட்டார் பம்பு செட்டுகள் அமைக்க தகுதி பெற்றவர்களாவர்.

இத்திட்டத்தின் மூலம் சூரிய சக்தி மின் பலகை அமைக்க ஆகும் செலவில் 30 சதவீதம் மத்திய அரசு மற்றும் மாநில அரசின் மானியமாகவும், மீதமுள்ள 40 சதவீதத்தை தமிழ்நாடு மின்சார பகிர்மான கழகத்தின் உத்தரவாதத்தின் பேரில் அரசு வங்கிகளின் நிதி உதவியுடன் அமைக்க உத்தரவிடப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சூரிய சக்தி மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை ஒரு யூனிட்டுக்கு ரூ.2.28 வீதம் நிதியுதவி வழங்கி வங்கி கணக்கில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செலுத்தி விடும். மேலும் சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்து மின் தொகுப்பில் ஏற்றுமதி செய்யும் ஒவ்வொரு யூனிட் மின்சாரத்திற்கும் விவசாயிக்கு 50 பைசா வீதம் ஊக்கத்தொகையாக வழங்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தினால் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் செயல்படுத்துவதன் மூலம் விவசாய உற்பத்தி பெருகுவதோடு மின் பாதையில் ஏற்படும் மின் இழப்பும் பெருமளவு குறையும்.மேலும் தரமான மின்சாரம் கிடைக்க வழிவகை ஏற்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதி உடைய விவசாயிகள் தங்கள் பகுதி செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகி தங்கள் விருப்ப கடிதத்தை அளித்து பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com