ஆடு, மாடு, கோழி வளர்க்க மானியம்

ஆடு, மாடு, கோழி வளர்க்க மினியம் வழங்கப்படுவதாக கலெக்டர் மர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
ஆடு, மாடு, கோழி வளர்க்க மானியம்
Published on

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆடு, மாடு வளர்ப்பு

மத்திய அரசு மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வள அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறையின் மூலமாக செயல்படுத்தப்படும் வேலைவாய்ப்பு உருவாக்கம், தொழில்முனைவோர் மேம்பாடு. கால்நடை உற்பத்தி திறன் அதிகரிப்பு மற்றும் இறைச்சி, பால், முட்டை, கம்பளி உற்பத்தியை அதிகரிப்பதை இலக்காக கொண்டு திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் நோக்கமானது புறக்கடை கோழி, செம்மறி ஆடு, வெள்ளாடு, பன்றி வளர்ப்பு, தீவனம் மற்றும் தீவன பயிர் சேமிப்பு மேம்படுத்துதல் ஆகும்.

இத்திட்டத்தின் கீழ் கோழி வளர்க்க, 1,000 நாட்டு கோழிகள் கொண்ட பண்ணை அமைத்து, முட்டை உற்பத்தி செய்து, கோழி குஞ்சு பொரிப்பகம் மூலம் கோழிக்குஞ்சுகள் உற்பத்தி செய்து 4 வார வயது வரை வளர்த்து விற்க மொத்த திட்ட செலவில், மூலதனத்தில் 50 சதவீதம் மானியம், அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை வழங்கப்படும்.

ரூ.50 லட்சம் வரை

ஆடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வளர்க்க 100, 200, 300, 400, 500 ஆடுகள் என ஐந்து அலகுகள் அமைக்க மொத்த திட்ட செலவில், 50 சதவீதம் மானியம், அதிகபட்சமாக ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை 2 தவணைகளில் வழங்கப்படும். பன்றி பண்ணை அமைக்க 50 பெண் பன்றிகள் அல்லது 100 பன்றிகள் கொண்ட அலகுகள் அமைக்க மொத்த திட்ட செலவில், 50 சதவீதம் மானியம், அதிகபட்சமாக ரூ.15 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை வழங்கப்படும்.

தீவனம் மற்றும் தீவனபயிர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக ஓராண்டில் 2,000 முதல் 2400 மெட்ரிக் டன் வைக்கோல், ஊறுகாய் புல் ஒரு நாளில் 30 மெட்ரிக் டன் மொத்த கலப்பு தீவனம், தீவன கட்டி தயாரித்தல் மற்றும் சேமித்தல் பணிகளை மேற்கொள்ள தளவாடங்கள் வாங்க மொத்த திட்ட செலவில் 50 சதவீதம் மானியம், அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரை வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் தனி நபர், சுய உதவி குழுக்கள், விவாசாய உற்பத்தியாளர்கள் அமைப்பு, விவசாய கூட்டுறவுகள், கூட்டு பொறுப்பு சங்கங்கள் தகுதியானவர்கள் ஆவர். தொழில் முனைவோர் சொந்தமாக அல்லது குத்தகைக்கு எடுக்கப்பட்ட நிலம் வைத்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கலாம்

தகுதியுள்ள நிறுவனங்கள் திட்டத்திற்கான வங்கி கடன் அனுமதி அல்லது வங்கி உத்தரவாதத்தை பெற வேண்டும். திட்ட மதிப்பீட்டிறகான அங்கீகாரத்தினையும் பெற வேண்டும். பயன்பெற விரும்புவோர் https://nlm.udyamimitra.in/: என்கிற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கலாம். இணையதளம் வாயிலாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களை இத்திட்டத்தை மாநில அளவில் செயல்படுத்தும் நிறுவனமான தமிழ்நாடு கால்நடை மேம்பாட்டு முகமையின் திட்ட மதிப்பீட்டு குழுவால் பரிசீலிக்கப்பட்டு திட்ட வழிகாட்டுதலின்படி உள்ளவற்றை கடன் வசதி பெற வங்கிக்கு அனுப்பப்படும்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com