புறநகர் ரெயில் சேவைகள் மாற்றுப்பாதையில் கால தாமதத்திற்குப் பின் இயக்கம்

சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரையிலான புறநகர் மின்சார ரெயில் சேவை சீரானது.
புறநகர் ரெயில் சேவைகள் மாற்றுப்பாதையில் கால தாமதத்திற்குப் பின் இயக்கம்
Published on

சென்னை,

சென்னை கடற்கரை செங்கல்பட்டு வழித்தடத்தில் இன்று காலை வந்து கொண்டிருந்த மின்சார ரெயில், சைதாப் பேட்டை அருகே வந்த போது 4 பெட்டிகள் கழன்றதன் காரணமாக புறநகர் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

இதனால் தாம்பரம் செல்லும் புறநகர் ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் கல்லூரி, அலுவலகம் செல்வோர் பணிக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இதனால் சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரையிலான புறநகர் மின்சார ரெயில் 2வது வழித்தடத்தில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

ரெயிலிலிருந்து திடீரென கழன்ற பெட்டிகள் அங்கிருந்து இழுத்துச்செல்லப்பட்டதைத்தொடர்ந்து, சுமார் இரண்டு மணி நேர தாமதத்திற்குப் பின் மின்சார ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டது.

தற்போது 2வது நடைமேடை வாயிலாக செங்கல்பட்டு செல்லும் ரயில்களும், 4வது நடைமேடை வாயிலாக தாம்பரம் செல்லும் ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com