

சென்னை,
சென்னை புறநகர் பகுதிகளில், ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில், ரெயில் சேவைகள் வழக்கமாக 30 சதவீதம் குறைக்கப்பட்டு இயங்கும். அதன்படி, இன்று காந்தி ஜெயந்தி.
இதன் காரணமாக இன்று சென்னை கடற்கரை செங்கல்பட்டு, சென்ட்ரல் அரக்கோணம், சென்னை சென்ட்ரல் கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை உள்ளிட்ட மின்சார ரெயில் வழித்தடங்களில், ஞாயிற்றுக்கிழமை அட்டவணை படி புறநகர் ரெயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.