மக்கள் எழுச்சியாக வந்தால்தான் வெற்றி: விஜய் குறித்து செல்லூர் ராஜூ பேட்டி

கட்சிக்கு அனைத்து நிலை நிர்வாகிகளையும் த.வெ.க. நியமித்து முடித்துள்ளது
சென்னை,
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு கடந்த ஆண்டு விக்கிரவாண்டியில் நடந்தது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கானவர்கள் கூடினர். இது கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, கட்சி கட்டமைப்பு பணிகளில் விஜய் தீவிரமாக இறங்கினார்.நகரம் தொடங்கி கிராமம் வரை கட்சிக்கு அனைத்து நிலை நிர்வாகிகளையும் த.வெ.க. நியமித்து முடித்துள்ளது. தற்போது, அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலை சந்திக்க த.வெ.க. ஆயுத்தமாகி வருகிறது.இதனிடையெ தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சியின் 2-வது மாநில மாநாட்டை ஆகஸ்டு மாத இறுதியில் நடத்த விஜய் முடிவு செய்துள்ளார். இதற்காக, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய இடங்களில் இடம் தேர்வு பணி நடந்து வந்தது. இதற்கிடையே, மதுரையில் மாநாடு நடத்துவதற்கு தற்போது தீர்மானிக்கப்பட்டு்ள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான இடம் தேர்வுக்காக நிர்வாகிகள் நேரடியாக ஆய்வு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில்., விஜய்யின் மதுரை மாநாடு குறித்த கேள்விக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியளர்களுக்கு பேட்டி அளித்தார் . இது தொடர்பாக அவர் கூறியதாவது ,
மதுரை மண்ணை மிதித்தால் வெற்றி கிடைக்கும் என எல்லோரும் நினைக்கிறார்கள்; மக்கள் எழுச்சியாக வந்தால்தான் வெற்றி கிடைக்கும்; அழைத்து வந்தால் பயனில்லை. என தெரிவித்தார் .






