தளியில் விவசாயி தற்கொலை

தளியில் விவசாயி தற்கொலை
Published on

தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள வனகனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வீரப்பா. இவருடைய மகன் மோகன் (வயது 31) விவசாயி. இவருக்கு தீராத வயிற்று வலியால் வயிற்றில் கட்டி ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் மீண்டும் வயிற்று வலி பிரச்சினையால் கடந்த 1-ந் தேதி விஷத்தை குடித்து விட்டார். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில், பெற்றோர் அவரை மீட்டு பாலத்தோட்டனப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். சம்பவம் குறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com