திருச்சி சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் உலக நன்மைக்காக சுதர்சன ஹோமம்

திருச்சி சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் உலக நன்மைக்காக சுதர்சன ஹோமம் நடைபெற்றது.
திருச்சி சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் உலக நன்மைக்காக சுதர்சன ஹோமம்
Published on

திருச்சி,

திருச்சி, தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் ஆனி மாத மூல நட்சத்திர வைபவம் நேற்று நடந்தது. இதனையொட்டி உலக நன்மைக்காகவும், சகல கிரக தோஷ நிவர்த்திக்காகவும் சுதர்சன ஹோமம் நடந்தது. இதனை தொடர்ந்து கோ பூஜையும், சிறப்பு திருமஞ்சனமும் நடந்தது. விழாவின் தொடர்ச்சியாக மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com