திடீர் பிரேக்... பஸ்சில் இருந்து வெளியே விழுந்த குழந்தை - அதிர்ச்சி வீடியோ


திடீர் பிரேக்... பஸ்சில் இருந்து வெளியே விழுந்த குழந்தை - அதிர்ச்சி வீடியோ
x

குழந்தையை சரியாக பிடிக்காததால், குழந்தை பஸ்சின் படிக்கட்டு வழியாக வெளியே விழுந்தது.

விருதுநகர்,

மதுரையில் இருந்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி தனியார் பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. பஸ்சில் 25க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். முத்துலிங்காபுரத்தை சேர்ந்தவர் மதன்குமார். இவர் தனது சகோதரி மற்றும் சகோதரியின் குழந்தைகளுடன் பஸ்சின் முன் பக்க படிக்கு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து இருந்தார்.

பஸ் வேகமாக சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டார். அப்போது ஒரு கையில் குழந்தையை வைத்துக்கொண்டு, மறு கையில் செல்போன் பார்த்துக்கொண்டிருந்த மதன் குமார், குழந்தையுடன் இருக்கையில் இருந்து கீழே விழுந்தார். அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

மதன் குமாரின் அருகில் அமர்ந்திருந்த அவரது சகோதரி, தன் கையில் வைத்திருந்த குழந்தையை சரியாக பிடிக்காததால், குழந்தை பஸ்சின் படிக்கட்டு வழியாக வெளியே விழுந்தது. அப்போது சாலையில் சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர், கீழே விழுந்த குழந்தையை விரைவாக சென்று தூக்கினார். குழந்தை லேசான காயத்துடன் உயிர் தப்பியது. இது தொடர்பான காட்சிகள் பஸ்சில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான நிலையில், தற்போது இந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.

1 More update

Next Story