சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கில் விசாரணை அதிகாரி திடீர் மாற்றம் 2-வது குற்றப்பத்திரிகை தயார்

சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கு விசாரணை அதிகாரி குணவர்மன் திடீரென்று மாற்றப்பட்டார். அந்த வழக்கில் 2-வது குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல் செய்யப்படுகிறது.
சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கில் விசாரணை அதிகாரி திடீர் மாற்றம் 2-வது குற்றப்பத்திரிகை தயார்
Published on

சென்னை,

நடன சாமியார் என்று அழைக்கப்படும் சிவசங்கர் பாபா மீதான பாலியல் குற்றச்சாட்டில், அவரது பள்ளியில் படித்த 3 மாணவிகள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் 3 போக்சோ வழக்குகள் தனித்தனியாக பதிவு செய்யப்பட்டது. மாணவிகளை மிரட்டி அவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக வழக்கில் தெரிவிக்கப்பட்டது.

சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கை விசாரித்து வந்தனர். சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. அவர் மீது ஏற்கனவே ஒரு வழக்கில் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. தற்போது 2-வது வழக்கிலும் குற்றப்பத்திரிகை தயாராகி விட்டது. விரைவில் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

விசாரணை அதிகாரி மாற்றம்

இந்தநிலையில் அந்த வழக்கில் விசாரணை அதிகாரியான துணை போலீஸ் சூப்பிரண்டு குணவர்மன் நேற்று திடீரென்று மாற்றப்பட்டார். அவர் சென்னை மாநகராட்சி விஜிலென்ஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். அங்கு பணியாற்றிய ஜெகதீஸ்வரன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.

புதிய விசாரணை அதிகாரி இன்னும் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com