பெண்ணாடத்தில் தொழிலாளி திடீர் சாவு

பெண்ணாடத்தில் தொழிலாளி திடீரென உயிழந்தா.
பெண்ணாடத்தில் தொழிலாளி திடீர் சாவு
Published on

பெண்ணாடம், 

பெண்ணாடம் பழைய பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் பெண்ணாடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஸ்பதி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திருமேனி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்தவரின் உடலை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தனர். விசாரணையில் அவர் ஸ்ரீமுஷ்ணம் தாலுகா ஏ.வள்ளியம் தெற்கு தெருவை சேர்ந்த தொழிலாளி மணிகண்டன் (வயது 50) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன் இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com