என்ஜினீயர் திடீர் சாவு

நெல்லையில் என்ஜினீயர் திடீரென்று இறந்தார்.
என்ஜினீயர் திடீர் சாவு
Published on

நெல்லை மேலப்பாளையம் ரெட்டியார்பட்டி ரோட்டை சேர்ந்தவர் சிவராமசுப்பிரமணியன். இவருடைய மகன் நாகராஜ் (வயது 30). என்ஜினீயரிங் படித்துள்ள இவர் கட்டுமான தொழில் செய்து வந்தார்.

நாகராஜ் சொந்தமாக வீடு கட்டி வருகிறார். அதற்கான பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் நேற்று காலை கட்டிட சுவரில் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென்று நெஞ்சு வலிப்பதாக கூறி சுருண்டு விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டார்.

இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com