மயங்கி விழுந்த முதியவர் திடீர் சாவு

100 நாள் வேலையின் போது மயங்கி விழுந்த முதியவர் திடீரென உயிரிழந்தார்.
மயங்கி விழுந்த முதியவர் திடீர் சாவு
Published on

காரியாபட்டி, 

திருச்சுழி அருகே புலியூரான் கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 63). இவர் புலியூரான் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையம் அருகே 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை செய்து வந்தார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்த கந்தசாமியை அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com