

சின்னசேலம்
கடலூர் மாவட்டம், விருத்தாசலம், மணவாளநல்லூரை அடுத்த கோமங்கலம் மேற்கு தெருவை சேர்ந்தவர் கலைச்செல்வன்(வயது 40). திருப்பூரில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வந்த இவர் நேற்று திருப்பூரில் இருந்து அரசு பஸ்சில் சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கலைச்செல்வனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நயினார்பாளையம் பஸ் நிறுத்தத்தில் வந்தபோது கலைச்செல்வன் பஸ்சில் இருந்து இறங்கி சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கலைச்செல்வனின் உடல் நிலை மிகவும் மோசமாக இருந்ததால் அவரை மேல் சிகிச்சைக்கு அழைத்து செல்வதற்காக 1908 ஆம்புலன்சை வரவழைத்தனர். அப்போது ஆம்புன்ஸ் ஊழியர்கள் கலைக்செல்வனின் உடலை பாசோதனை செய்தபோது அவர் இறந்து விட்டது தொயவந்தது. இது பற்றிய தகவல் அறிந்து வந்த கீழ்குப்பம் போலீசார் கலைச்செல்வனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இருது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.