தொழிலாளி திடீர் சாவு

தொழிலாளி திடீரென்று இறந்து கிடந்தார்
தொழிலாளி திடீர் சாவு
Published on

விக்கிரமசிங்கபுரம்:

மணிமுத்தாறு பேரூராட்சி திருப்பதியாபுரம் படித்துறை தெருவைச் சேர்ந்தவர் சங்கர நாராயணன் (வயது 48). இவர் ஒரு நூற்பாலையில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் நேற்று காலையில் தாமிரபரணி ஆற்றில் மீன்பிடிப்பதற்காக, அங்குள்ள வயல்வெளி அருகில் மண்புழு எடுப்பதற்காக சென்றார். இந்த நிலையில் வயல்வௌ அருகில் சங்கர நாராயணன் திடீரென்று இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், விக்கிரமசிங்கபுரம் பாலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த சங்கரநாராயணனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து எப்படி இறந்தார்? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com