தொழிலாளி திடீர் சாவு

புதுக்கடை அருகே தொழிலாளி திடீரென இறந்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழிலாளி திடீர் சாவு
Published on

புதுக்கடை:

புதுக்கடை அருகே தொழிலாளி திடீரென இறந்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கடை அருகே உள்ள கிள்ளியூர், ஆயினிவிளை பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 61), தொழிலாளி. இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், சம்பவத்தன்று இரவு ரவீந்திரனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து உறவினர்கள் அவரை வெள்ளையம்பலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ரவீந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ரவீந்திரனின் மனைவி வள்ளியம்மாள் புதுக்கடை பேலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com