தொழிலாளி திடீர் சாவு

பாவூர்சத்திரத்தில் தொழிலாளி திடீரென இறந்தார்.
தொழிலாளி திடீர் சாவு
Published on

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே கரிசல்லூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜ் (வயது 53). இவர் பாவூர்சத்திரத்தில் உள்ள தனியார் சுண்ணாம்பு தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்தது வந்தார். இவருடன் மொத்தம் 9 பேர் சுண்ணாம்பு பவுடர் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வேலை முடிந்து மாலையில் தொழிற்சாலையின் உள்ளே உள்ள குளியலறையில் இவரும், அவருடன் மற்றொரு தொழிலாளி கீழப்பாவூரைச் சேர்ந்த பழனியப்பனும் குளிக்க சென்றுள்ளனர். அங்கு இருவரும் திடீரென மயங்கி விழுந்தனர்.

இதை பார்த்த மற்ற தொழிலாளிகள் உடனடியாக இருவரையும் கார் மூலம் தென்காசியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்தபோது ராஜ் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். பழனியப்பன் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com