தொழிலாளி திடீர் சாவு

வேலூர் அருகே தொழிலாளி திடீரென இறந்தார்.
தொழிலாளி திடீர் சாவு
Published on

ராணிப்பேட்டை மாவட்டம் மேலகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் நரேஷ்குமார் (வயது 29).

இவர்  பெருமுகையில் உள்ள டாஸ்மாக் பார் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். நரேஷ்குமாருக்கு திருமணம் ஆகவில்லை.

கடந்த 1-ந் தேதி அவர் பெருமுகையில் உள்ள கோவில் அருகே படுத்து தூங்கி உள்ளார்.

வெகுநேரமாகியும் அவர் எழுந்திருக்கவில்லை. இதையடுத்து பொதுமக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சத்துவாச்சாரி போலீசார் அங்கு சென்று மயங்கிய நிலையில் காணப்பட்ட நரேஷ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்து போனார்.

இதுகுறித்து சத்துவாச்சாரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குப்பதிந்து நரேஷ்குமார் உடல்நலக்குறைவால் உயிரிழந்தாரா? அல்லது அதிகளவு மதுகுடித்ததன் காரணமாக இறந்து போனாரா? என்று விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com