சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்

பழனியில் உள்ள திண்டுக்கல் சாலையில் திடீரென்று பள்ளம் ஏற்பட்டது.
சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்
Published on

பழனியில் உள்ள திண்டுக்கல் சாலையில் பழனியாண்டவர் கலை மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகள், கோர்ட்டு, அரசு பள்ளிகள், உழவர்சந்தை, வங்கிகள், அரசு போக்குவரத்து கழக பணிமனை என அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் செயல்படுகின்றன. மேலும் திண்டுக்கல், மதுரை, திருச்சி, தேனி செல்லும் பஸ்கள் இந்த சாலை வழியே செல்கின்றன. எனவே காலை மற்றும் மாலை நேரத்தில் திண்டுக்கல் சாலையில் பேக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம்.

இந்நிலையில்  திண்டுக்கல் சாலையில் எல்.ஐ.சி. அலுவலகம் எதிரே திடீர் பள்ளம் ஏற்பட்டது. சுமார் 2 அடி அளவில் இந்த பள்ளம் இருந்தது. இதையடுத்து அங்கு விபத்து ஏற்படுவதை தடுக்க சிவப்பு துணி கட்டி எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. இந்த பள்ளத்தால் விபத்து ஏற்படுவதற்கு முன்பு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினர் கூறும்போது, நகராட்சி சார்பில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாய் உடைந்ததால் இந்த பள்ளம் ஏற்பட்டது. விரைவில் இந்த பள்ளம் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com