குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து

கடையநல்லூர் அருகே குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து
Published on

கடையநல்லூர்:

கடையநல்லூரில் இருந்து சுந்தரேசபுரம் செல்லும் பிரதான சாலையில் இலங்கை தமிழர் மறுவாழ்வு இல்லம் உள்ளது. அதன் அருகில் தென்காசி, கடையநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகள் அதிக அளவில் இங்கு கொட்டப்பட்டு குவித்து வைக்கப்பட்டு வருகிறது. மேலும் இங்கு உரக்கிடங்கும் உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டு இருந்த இடத்தில் இருந்து திடீரென கரும்புகை வந்தது. பின்னர் சிறிது நேரத்தில் தீப்பிடித்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் உடனடியாக கடையநல்லூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் தீ மற்ற இடங்களுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது.

இரவு நேரத்தில் இங்கு வந்து மது அருந்திய நபர்கள் யாராவது புகை பிடித்து விட்டு போட்டதால் எதேச்சையாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் சதி செயலா? என்ற கோணத்தில் சொக்கம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com