வீட்டில் திடீர் தீ விபத்து

நாகையில் வீட்டில் திடீர் தீ விபத்து
வீட்டில் திடீர் தீ விபத்து
Published on

நாகை மஞ்சக்கொல்லை சிவன் தெற்குவீதியை சேர்தவர் அருள்வாசகம். இவர் பழமைவாய்ந்த ஓட்டு வீட்டில் தனது மனைவி மங்கையர்கரசியுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் அருள் வாசகம் பணிக்கு சென்ற நிலையில், மனைவி மங்கையர்கரசியும் வீட்டை பூட்டிவிட்டு ரேஷன் கடைக்கு சென்று விட்டார். அப்போது எதிர்பாராத விதமாக அருள் வாசகம் வீட்டில் தீப்பிடித்தது. தொடர்ந்து காற்றின் வேகம் காரணமாக தீ மள,மள வென பரவியது. இது குறித்து நாகை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருந்தும் வீட்டிலிருந்த பீரோ, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் மற்றும் நில பத்திரம், ஆதார் கார்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் என ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் முழுவதும் எரிந்து சாம்பல் ஆனது. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து நாகை டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com