என்எல்சி அனல்மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து

தீ விபத்தால் அனல்மின் நிலையத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
கடலூர்,
நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல்மின் நிலைய விரிவாக்கத்தின்போது டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட மின் கசிவால் தீ ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் புகை சூழ்ந்தது.
இது குறித்து தவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பல மணி நேரமாக பற்றி எரிந்துவரும் தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்புத் துறையினர் முயற்சித்து வருகின்றனர்.
3 மணி நேரத்திற்கும் மேலாக தீ பற்றி எரிந்துவரும் நிலையில் மற்ற இடங்களுக்கு பரவாமல் தடுக்கும் முயற்சியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமான ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அனல் மின் நிலையத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இன்று அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், கோடிக்கணக்கில் பொருட்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story






