

சென்னை
சென்னை துறைமுகத்தில் திடீரென இன்று காலை வாயு கசிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் சாலையெங்கும் புகைமூட்டம் காணப்படுகிறது. அது காற்றில் விரைவாக பரவி பொதுமக்களுக்கும், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் மூச்சு திணறல், இருமல், குமட்டல், கண், உடல் எரிச்சல் ஏற்பட்டு உள்ளது. கப்பலில் இருந்து சல்பேட் வாயு கசிந்துள்ளது என்றும் தீ விபத்து எதுவும் இல்லை என்றும் தகவல் தெரிவிக்கின்றது.
இதனால், தலைமைச்செயலகம் உள்ளேயும் அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, துறைமுகத்துக்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு, ஆம்புலன்சில் அழைத்து செல்லப்படுகின்றனர். ரசாயன பொடிகளை தூவி அதனை தணிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
திடீர் வாயு கசிவால், பொதுமக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது. சுவாசிக்கவும் அவதிப்படுகின்றனர். பட்டாசு மருந்துபோன்று நெடி ஏற்பட்டு உள்ளது என்று பொதுமக்கள் தெரிவித்து உள்ளனர்.