மின் கசிவால் வீட்டில் திடீர் தீ விபத்து; வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து நாசம்

மின் கசிவால் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு வீட்டு உபயோக பொருட்கள் தீயில் கருகியது.
மின் கசிவால் வீட்டில் திடீர் தீ விபத்து; வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து நாசம்
Published on

திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட ரெட்டிக்குளம் பகுதியில் வசிப்பவர் கமலக்கண்ணன் (வயது 49). இவர் நேற்று காலை வீட்டை பூட்டிக் கொண்டு காந்திநகர் பகுதியில் உள்ள திரவுபதி அம்மன் மற்றும் கீழ்பஜார் தெருவில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்றார். அங்கு சாமி தரிசனம் முடித்துக்கொண்டு 11 மணி அளவில் கோவிலில் இருந்து வீட்டிற்கு வந்தபோது வீட்டில் இருந்து கரும்புகை வெளியே வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் இதுகுறித்து கமலக்கண்ணன் திருத்தணி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அரைமணி நேரத்திற்கு மேல் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் வீட்டிற்குள் இருந்த கட்டில், மெத்தை, டிவி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் தீயில் கருகியது. தீ விபத்து ஏற்பட்ட வீட்டின் அருகே வீடுகள் இல்லாததால் தீ மற்ற இடங்களுக்கு பரவாமல் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து திருத்தணி வருவாய் துறையினர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தியதில் மின்கசிவு காரணமாக வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com