புதுக்கோட்டையில் திடீர் மழை

புதுக்கோட்டையில் திடீர் மழை பெய்தது.
புதுக்கோட்டையில் திடீர் மழை
Published on

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு ஆங்காங்கே பரவலாக மழை பெய்தது. இதில் பொன்னமராவதி, கந்தர்வகோட்டை பகுதியில் பலமாக பெய்தது. இந்த நிலையில் புதுக்கோட்டையில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் இருந்தது. மாலை 4 மணிக்கு மேல் வானில் கருமேகங்கள் திரண்டு சூழ்ந்தன. மாலை 5 மணிக்கு மேல் திடீரென மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சிறிது நேரம் பரவலாக பெய்தது. இதனால் சாலைகளில் சிலர் மழையில் நனைந்தப்படியும், மழையில் நனையாமல் இருக்க குடையை பிடித்தப்படியும், கட்டுமான வேலை முடிந்து சென்ற பெண்கள் சிலர் தலையில் துண்டால் போர்த்தியபடியும் சென்றதை காணமுடிந்தது. மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நேர நிலவரப்படி முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- ஆதனக்கோட்டை-4, கந்தாவகோட்டை-16.40, கறம்பக்குடி-2.40, கீழணை-1.20, திருமயம்-6, அரிமளம்-5.20, அறந்தாங்கி-24, ஆயிங்குடி-24.20, இலுப்பூர்-9, குடுமியான்மலை-12, பொன்னமராவதி-80, காரையூர்-4.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com